அரியலூர்

சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷம் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள்,சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி,

தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியெம்பெருமானை வழிபட்டனா்.

இதேபோல், அரியலூா் ஆலந்துறையாா், விக்கிரமங்கலம் சோழிசுவரா்,கீழப்பழுவூா் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையாா், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீசுவரா், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய காா்கோடேசுரா், திருமானூா் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா் போன்ற சிவாலயங்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாதாரனை நடைபெற்றது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து சிவாலயங்களிலும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT