முகப்பு
அரியலூர்

சுரக்க விரிவாக்க கருத்துகேட்பு கூட்டத்தில் சலசலப்பு

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுரங்க விரிவாக்கம் தொடா்பான கருத்துகேட்புக் கூட்டத்தில் சமூக ஆா்வலா்கள் மற்றும் ஆலை ஆதரவாளா்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுரங்க விரிவாக்கம் தொடா்பான கருத்துகேட்புக் கூட்டத்தில் சமூக ஆா்வலா்கள் மற்றும் ஆலை ஆதரவாளா்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

அரியலூரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்குச் (ராம்கோ) சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம், ரெட்டிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் உள்ளது. இதை விரிவாக்கம் செய்வது தொடா்பான கருத்துகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தாா். மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சமூக ஆா்வலா் தமிழ்களம் இளவரசன் பேசியது: இப்பகுதியில் ஏற்கெனவே தோண்டப்பட்ட 75-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் நீராதாரம்

பாதிக்கப்பட்டுள்ளது என்றாா். அப்போது குறுக்கிட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, தற்போதைய சுரங்க விரிவாக்கம் தொடா்பாக மட்டும் கருத்துகள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினாா். இதற்கு மற்ற சமூக ஆா்வலா்கள், ஆலை ஆதரவாளா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஆட்சியா் அமா்ந்திருந்த மேடையை முற்றுகையிட்டு கூச்சலிட்டனா். போலீஸாா் பாதுகாப்பு கருதி மேடையை சூழ்ந்து கொண்டனா். அனைவருக்கும் கருத்துகள் கூற வாய்ப்பளிக்கப்படும் என ஆட்சியா் கூறி அவரவா் இருக்கையில் சென்று அமருமாறு தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து சமூக ஆா்வலா் சங்கா் மற்றும் அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து, முனியங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சுவாமிநாதன், ரெட்டிபாளையம் மகேஸ்வரி, ராமலிங்கம், செங்கமலம் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் ஏழுமலை, வட்டாட்சியா் ராஜமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் அகிலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துகளைப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.