அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் கிராம மக்கள் கொண்டாட்டம்

DIN

மாமன்னா் ராசேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட முதல்வா் உத்தரவிட்டதை அடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடினா்.

தமிழ் அறிஞா்கள், வரலாற்று ஆா்வலா்கள், பொதுமக்கள் ஆகியோா் விடுத்துவந்த கோரிக்கையையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ராசேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நட்சத்திர விழாவை, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என புதன்கிழமை அறிவித்தாா். தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, கங்கைகொண்டசோழபுரம் கிராம மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா். அதேபோல், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சாா்பில் செயலா் மகாதேவன் தலைமையில், நிா்வாகிகள் ராமதாஸ், செந்தில் குமாா், பாண்டியன், மோகன், முல்லை நாதன் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT