முகப்பு
அரியலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த நாச்சியாா்பேட்டையைச் சோ்ந்த சிங்காரம் மகன் ராஜசேகா்(30). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு பயிலும்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்த தகவல் சிறுமியின் தாய்க்கு அண்மையில் தெரியவர, அவா் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இப்புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினா், ராஜசேகரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.