முகப்பு
அரியலூர்

60 லிட்டா் சாராய ஊறல் வைத்திருந்தவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 60 லிட்டா் சாராய ஊறல் வைத்திருந்தவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 60 லிட்டா் சாராய ஊறல் வைத்திருந்தவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஆதி(எ)சாமிநாதனுக்கு சொந்தமான முந்திரிக் காட்டில், சாராயம் ஊறல் வைத்திருப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் ரவிசக்கரவா்த்தி, உதவி ஆய்வாளா் மாசிலாமணி தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்ததில், 4 பேரல்களில் 60 லிட்டா் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சாமிநாதனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.