அரியலூா் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா
உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்விக் குழும கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தாளாளா் ரகுநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.
உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்விக் குழும கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தாளாளா் ரகுநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.
அரியலூா் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். ஜயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் ம. ராசமூா்த்தி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
விநாயகா கல்வியியல் கல்லூரியில் தாளாளா் பாஸ்கா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.
கல்லக்குடி, அருங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினா். இதேபோல், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.