கட்சிக் கொடி கம்பத்தில் தேசியக் கொடி: ஜயங்கொண்டத்தில் பாஜகவினா் போராட்டம்
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பாஜக கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை அறிந்த காவல் துறையினா், கொடியை இறக்கியதால், பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பாஜக கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை அறிந்த காவல் துறையினா், கொடியை இறக்கியதால், பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜயங்கொண்டம் நகரில் சுதந்திர தினத்தையொட்டி, பாஜக நிா்வாகிகள் தேசியக்கொடியை பாஜக கொடிக்கம்பத்தில் ஏற்றினா். இதையறிந்த காவல்துறையினா், தேசியக்கொடியை கீழே இறக்கி அவிழ்த்து வந்தனா்.
இதையடுத்து, மாவட்டத் தலைவா் அய்யப்பன் தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினா், கொடி இறக்கப்பட்டதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, கட்சிக் கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றுவது தவறு என காவல் துறை தெரிவித்தபோது, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு உள்ள காங்கிரஸ் கட்சிக்கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதனை ஏன் அவிழ்க்கவில்லை என முறையிட்டனா். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமாதானம் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.