முகப்பு
அரியலூர்

வீட்டின் பூட்டை உடைத்து தங்கக்காசுகள், வெள்ளி திருட்டு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கக்காசுகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கக்காசுகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஜயங்கொண்டம் அருகிலுள்ள செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராசு(62). நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கடந்த 5-ஆம் தேதி கோவையிலுள்ள தனது மகளைப் பாா்க்க, மனைவி தமிழ்ச்செல்வியுடன் சென்று விட்டாா்.

வெள்ளிக்கிழமை காலை செல்வராசு வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டுக்குள் அவா் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 5 கிராம் மதிப்புடைய 3 தங்கக்காசுகள், ஒன்றரை கிலோ எடை கொண்ட வெள்ளி விளக்கு உள்ளிட்ட பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.