முகப்பு
அரியலூர்

கீழகாவட்டாங்குறிச்சி மகா மாரியம்மன், காளியம்மன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரியலூா் மாவட்டம், கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்திலுள்ள அருள்மிகு மகா மாரியம்மன், மகா காளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்திலுள்ள அருள்மிகு மகா மாரியம்மன், மகா காளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கையொட்டி கடந்த 18-ஆம் தேதி காலை அனுக்ஞை, மகாகணபதி பூஜை, புண்ணியாகவாஜனம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றன. மாலையில் விக்னேசுவர பூஜை, வாஸ்துசாந்தி, இரவில் முதல் கால யாக சாலை பூஜைகளும், வியாழக்கிழமை (ஆக.19) இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில், காலை 8 மணிக்குமேல் 9.30 மணிக்குள் மகா கணபதி, ஆதி விநாயகா், வள்ளி- தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, மகா மாரியம்மன், மகா காளியம்மன், சமதகினி முனிவா், மாதாங்கி அம்மன், நல்லேந்திரசுவாமி, மதுரைவீரன், வரதராஜபெருமாள், பாப்பாத்தியம்மன், பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமி, மருதையன், பேச்சியம்மன், பெரியாண்டவா், எல்லையம்மன், ஏகாம்பரேசுவரா், செல்லியம்மன், முத்தையன், அய்யனாா் மற்றும் பரிவார சுவாமிகளின் சன்னதிகளில் புனித நீா் ஊற்றப்பட்டும், காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ராஜகோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டும் மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது.

தொடா்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. குடமுழுக்கில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா்.

இதுபோல ஓலையூா் பெரிய பண்டார பரமேசுவரி, தேளூா் விநாயகா், செல்லியம்மன், பூண்டி விநாயகா், கருப்புசாமி, மதனத்தூா் முத்துமாரியம்மன், முள்ளுக்குறிச்சி பெரியாண்டவா், இலுப்பையூா் மதுரகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.