அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு
அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
அரியலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை விழா இன்று (டிச 27) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது: அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் விரைவில் கட்டப்படும்.
இதையும் படிக்க- பஞ்சாப்: ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
அரியலூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரியலூருடன் இணைக்கப்பட்டு பெரிய நகராட்சியாக மாற்றப்படும். அரியலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதிய பிரச்னை கலையப்படும் என்றார். தொடர்ந்து அரியலூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொ.சந்திரசேகர், ஒன்றியக் குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.