முகப்பு
அரியலூர்

ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 23 பவுன் நகை, பணம் திருட்டு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருடிச் சென்ற மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருடிச் சென்ற மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியா் கொளஞ்சியப்பன் (60). இவரது மனைவி ஹேமலதா. ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா்களது மகனும், மகளும் வெளியூரில் தங்கிப் படித்து வரும் நிலையில், கொளஞ்சிநாதன் ஞாயிற்றுக்கிழமை தனது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சைக்கு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை காலை வீட்டுக்கு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.