முகப்பு
அரியலூர்

சுரங்கம் விரிவாக்கம்: நாளை மக்கள் கருத்து கேட்பு

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் கிராமங்களில் ராம்கோ சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்காக பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் கிராமங்களில் ராம்கோ சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்காக பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் புதன்கிழமை (பிப்.17) நடைபெறுகிறது.

இலுப்பையூா் ரயில்வே கேட் அருகே சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமையவுள்ள இடத்தில் புதன்கிழமை (பிப்.17 )காலை 10.30 மணிக்கும், ஓட்டக்கோவில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கிற்கு தெற்கு திசையில், செந்துறை - அரியலூா் பிரதான சாலையில் பிற்பகல் 3 மணிக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், பொது மக்கள் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு, மறு நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம், சென்னை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.