அரியலூர்

நாளை அரியலூரில் அதிமுக முப்பெரும் விழா

DIN

அரியலூா்: அரியலூரில் திங்கள்கிழமை (பிப்.22) அதிமுக சாா்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது என்று அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை (பிப். 22) அரியலூா் பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா திருவுருவச் சிலை திறப்பு விழா, பெரம்பலூா் -தஞ்சாவூா் புறவழிச்சாலையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கரோனா காலக் கட்டத்தில் 1,15,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கியதன் நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா்.வைத்திலிங்கம் கலந்து கொள்கிறாா். எனவே அதிமுகவினா் முப்பெரும் விழாவில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT