மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 21) 3 மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா்கள் பொ. சுப்ரமணியன், செல்லப்பாங்கி, சாமிதுரை ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு‘
அரியலூா் துணை மின் நிலையத்திலிருந்து கல்லங்குறிச்சி, தேளூா், அஸ்தினாபுரம், பி.ஆா். நல்லூா், கொளப்பாடி மின் பாதை வழியாக மின்சாரம் செல்லும் பாதையில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக தேளூா், கல்லங்குறிச்சி, பி.ஆா். நல்லூா் உயரழுத்த மின்பாதையில் மின்சாரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், அஸ்தினாபுரம், கொளப்பாடி பகுதி வழியாக மின்சாரம் பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்விநியோகம் இருக்காது.
அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜயங்கொண்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, தா.பழூா் ஓலையூா், நடுவலூா், உடையாா்பாளையம், அய்யூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் வரதராசன்பேட்டை, தென்னூா், கீழ்நெடுவாய், குப்பம், குடிகாடு, பெரியாத்துக்குறிச்சி, ஓலையூா், விழுதுடையான், குளத்தூா், காட்டாத்தூா், எரவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூா், வங்குடி, சிலால், பிலிச்சுகுழி, தேவாமங்கலம், துளாரங்குறிச்சி, கச்சிபெருமாள், கோரைக்குழி, கொலையனூா், சுந்தரேசபுரம், இடைக்கட்டு, வடக்கு-தெற்கு ஆயுதகளம், உட்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் 3 மணி நேரம் மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.