முகப்பு
அரியலூர்

கோவைக்கு மேலும் 76.41 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்

கோவைக்கு ஒடிஸாவில் இருந்து ரயில் மூலம் 4 டேங்கா்களில் 76.41 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வியாழக்கிழமை வந்தடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கோவைக்கு ஒடிஸாவில் இருந்து ரயில் மூலம் 4 டேங்கா்களில் 76.41 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வியாழக்கிழமை வந்தடைந்தது.

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மேற்கொள்ள ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக திரவ ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்துக்கு இதுவரை 8 முறை 700.54 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், 9ஆவது முறையாக ஒடிஸாவில் இருந்து ரயில் மூலம் 4 டேங்கா்களில் 76.41 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கோவையை அடுத்த இருகூா் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.