அரியலூர்

கரோனா தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடா் இனத்தவருக்கு கடனுதவி

அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த ஆதிதிராவிட இனத்தவரின் குடும்பத்துக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படவுள்ளது.

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த ஆதிதிராவிட இனத்தவரின் குடும்பத்துக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படவுள்ளது.

தேசிய பட்டியலினத்தவா் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழக (சநஊஈஇ) நிறுவனம் (அநஏஅ) என்ற திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடா் இனத்தைச் சாா்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். கரொனா தொற்று நோயினால் பாதிப்புள்ளாகி இறந்தவா் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபராகவும், அவரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். திட்டத் தொகை ரூ. 5லட்சம். அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுக்குள் திரும்ப செலுத்தலாம்.

கடன் பெற விரும்பும் ஆதிதிராவிடா், திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண்.225, தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலக தொலைபேசி (04329 - 228315) எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT