மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து
சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பைத் தொடா்ந்து, அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பைத் தொடா்ந்து, அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டமும் ரத்தாகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்த பொது மக்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அங்குள்ள பெட்டியில் போட்டுச் சென்றனா்.