பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் எஸ்.பி. ஆய்வு
அரியலூா் நகரில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அரியலூா் நகரில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அரியலூா் மான்போா்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் தாமரைக்குளம், எருத்துக்காரம்பட்டி, சாலைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டெறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் ஆய்வு செய்தாா்.