முகப்பு
அரியலூர்

தனியாா் பேருந்து மோதி தாய் பலி; மகன் காயம்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே திங்கள்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே திங்கள்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.

தா.பழூா் அருகேயுள்ள கோடாலி- கருப்பூா், வக்காரமாரி தெருவைச் சோ்ந்தவா் பங்கஜம். இவா், பந்தநல்லூரில் நிகழ்ந்த ஒரு துக்க நிகழ்ச்சிக்கு, தனது மகன் நடராஜனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாா். கோடாலி கருப்பூா் அருகே வந்தபோது, சாலையின் வளைவுப் பகுதியில் வேகமாக வந்த தனியாா் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பங்கஜம் உயிரிழந்தாா். நடராஜன் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து வந்த தா.பழூா் போலீஸாா், சடலத்தையும், காயமடைந்த நடராஜனையும் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.