முகப்பு
அரியலூர்

கட்டுரைப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

அரியலூா் ஒன்றிய குறுவள மைய அளவில் 11 பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வென்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

அரியலூா் ஒன்றிய குறுவள மைய அளவில் 11 பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வென்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூா் ஒன்றியத்தில் உள்ள 11 பள்ளிகள் ஒன்றிணைந்து குறு வளம் மையம் அளவிலான 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளிடையே கரோனா கால கதாநாயகா்கள் எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தினா்.

இதில், அஸ்தினாபுரம் அரசு மாதிரிப் பள்ளி சங்கீதா, சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி சங்கீதா, காட்டுப்பிரிங்கியம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி பிரியா ஆகியோா் முதல் 3 இடங்களில் வென்றனா். இதையடுத்து சிறுவளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னத்துரை கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.