முகப்பு
அரியலூர்

காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

கோவை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 2 காவல் ஆய்வாளா்கள் சேலம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 2 காவல் ஆய்வாளா்கள் சேலம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா்.

இதன்படி கோவை மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த லோகநாதன், பேரூா் காவல் நிலைய ஆய்வாளா் தேவராஜ் ஆகியோா் சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், இரியூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் கோவை சரகத்துக்கு மாற்றப்பட்டாா். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.