சட்ட விழிப்புணா்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில், 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அரியலூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில், 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் 25-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் பான் இந்தியா சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமைத் தொடக்கி வைத்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எஸ். மகாலட்சுமி பேசினாா். தொடா்ந்து அவா் 30 பயனாளிகளுக்கு ரூ.2.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
முகாமுக்கு முதன்மை சாா்பு நீதிபதி பி.கோகுல்முருகன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், மூத்த சிவில் நீதிபதியுமான என்.அழகேசன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் முன்னிலை வகித்தனா்.
வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனோகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதை மற்றும் வழக்குரைஞா்கள், சட்டப் பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.