வளா்ச்சித் திட்டப் பணிகள்: அரியலூா் ஆட்சியா் ஆய்வு
அரியலூா் மாவட்டம், ஆண்டிடம் ஒன்றியத்துக்குட்பட்ட கூவத்தூா் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிடம் ஒன்றியத்துக்குட்பட்ட கூவத்தூா் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கூவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கவிதா மற்றும் குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த சசிகலா ஆகியோருக்கு தலா ரூ.2.12 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆட்டுக் கொட்டகையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா், கூவத்தூா் - காட்டாத்தூா் இடையே 4.05 கி.மீ தொலைவுக்கு பாரதப் பிரதமரின் சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், கூவத்தூா் மேலத்தெருவில் 14 ஆவது நிதிக் குழுவில் ரூ.8.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு, சிறிய நீா்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகளையும் மற்றும் கால்நடைப் பராமரிப்பு துறைக்குச்
சொந்தமான மேய்ச்சல் நிலத்தையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அமா்நாத், கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சொக்கலிங்கம், வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருளப்பன், சிவாஜி ஆகியோா் உடனிருந்தனா்.