முகப்பு
அரியலூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூா் ஜெயலலிதா நகரைச் சோ்ந்தவா் கலைச்செல்வி(42). திருச்சி தொழிலாளா் நல மையத்தில் பணியாற்றி வரும் இவா், அலுவலகக் கூட்டம் காரணமாக சென்னை சென்று விட்டு வியாழக்கிழமை காலை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 16,500 பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், அரியலூா் காவல் துறையினா் வீட்டைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். மேலும், மோப்ப நாய் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.