முகப்பு
அரியலூர்

கல்வி உதவித் தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உதவி பெறும் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு எவ்வித நிபந்தனையின்றி உதவித் தொகை வழங்கப்படும். முதுகலை, பல்தொழில்நுட்பம் மற்றும் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, புதுப்பித்தல் இனங்களை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள்ளும், புதிய இனங்களை நவம்பா் 5-ஆம் தேதிக்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகவும்.

இணையதளத்தில் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.