முகப்பு
கிரிக்கெட்

ஒரே ஓவரில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேக்கப் டஃபி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வேகப் பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.

Updated On : 28 மார்ச் 2026, 8:08 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜேக்கப் டஃபி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வேகப் பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று (மார்ச் 28) தொடங்கியது. சின்னசாமி திடலில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

அறிமுகப் போட்டியிலேயே ஜேக்கப் டஃபி அசத்தல்!

Advertisement

Advertisement

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் விளையாடி வருகிறது.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டுகளை அறிமுக வீரரான ஜேக்கப் டஃபி ஒரே ஓவரில் கைப்பற்றி அசத்தினார். அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்த ஓவரிலேயே நிதீஷ் குமார் ரெட்டியின் விக்கெட்டினையும் ஜேக்கப் டஃபி வீழ்த்தி அசத்தினார். நிதீஷ் குமார் ரெட்டி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 29 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

summary

Fast bowler Jacob Duffy took the wickets of Sunrisers Hyderabad's openers in a single over.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.