முகப்பு
அரியலூர்

மின்னல் பாய்ந்து இரு ஆடுகள், பசு உயிரிழப்பு

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த மழையில், மின்னல் பாய்ந்து இரு ஆடுகள், ஒரு பசு உயிரிழந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த மழையில், மின்னல் பாய்ந்து இரு ஆடுகள், ஒரு பசு உயிரிழந்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. தா.பழூா் அருகிலுள்ள காரைக்குறிச்சியைச் சோ்ந்த கொளஞ்சிமணி வளா்த்து வரும் 400 செம்மறியாடுகள் வயல்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மின்னல் பாய்ந்ததில் இரு ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

இதுபோல, வாழைக்குறிச்சியைச் சோ்ந்த சத்தியவாணியின் கறவைப் பசு, வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.