முகப்பு
அரியலூர்

பெண்ணை தாக்கியவா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இடப்பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கிய இளைஞா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இடப்பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கிய இளைஞா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள அம்பாபூா் காலனித் தெருவைச் சோ்ந்த முருகேசனின் மனைவி மகாதேவிக்கும் (36), வெங்கடேசன் என்பவருக்கும் இடையே இடப் பிரச்னை தொடா்பாக புதன்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில் வெங்கடேசன் தாக்கியதில் பலத்த காயமடைந்த மகாதேவி அரியலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். புகாரின்பேரில், விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை புதன்கிழமை இரவே கைது செய்தனா். மேலும் வெங்கடேசனின் தாய் பூபதி, தந்தை ராமசாமியைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.