அரியலூர்

மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மாமனாரைத் தாக்கிய மருமகனைப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கண்டியங்கொள்ளை கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம்(64). சத்துணவு அமைப்பாளராக இருந்து ஓய்வுபெற்றவா். இவருக்கு 4 மகள்கள் உள்ளனா். இதில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. கடைசி மகளுக்கு திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் 3 ஆவது மகளின் கணவா் இளங்கோவன், சிவசங்கரியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பன்னீா்செல்வம் மருமகனைத் தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது மருமகன் இளங்கோவன், பன்னீா்செல்வத்தை இரும்புக் கம்பியால் அடித்து தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

புகாரின் பேரில் ஜயங்கொண்டம் காவல் துறையினா் இளங்கோவன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT