கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடவு
அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே கோயில் வளாகத்தில் தென்னை, வேம்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை கிராம மக்கள் வியாழக்கிழமை நட்டு வைத்தனா்.
அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே கோயில் வளாகத்தில் தென்னை, வேம்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை கிராம மக்கள் வியாழக்கிழமை நட்டு வைத்தனா்.
தா.பழூா் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா் கிராமத்தில் கங்காஜடேசுவரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மிகவும் பழமை மற்றும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோயிலின் வளாகத்தின் நந்தவனத்தை புதுப்பிக்கும் முயற்சியாக கிராம மக்கள் ஒன்றிணைந்து தென்னை, மா, பலா, வேம்பு, தேக்கு, வில்வம், வன்னி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். மேலும், பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் மற்றும் பூச்செடிகளையும் நட்டுவைத்தனா். முன்னதாக கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.