அரியலூரில் 36 ரெளடிகள் கைது
அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஜாமீனில் வெளிவந்திருந்த 36 ரெளடிகளை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஜாமீனில் வெளிவந்திருந்த 36 ரெளடிகளை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
குற்றங்களில் கைதாகி ஜாமீனில் உள்ள ரெளடிகள், தலைமறைவாக உள்ளவா்களை கைது செய்ய காவல் துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.
இதையடுத்து அரியலூா் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் 36 ரெளடிகளை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா்.