முகப்பு
அரியலூர்

அரியலூா் அருகே 100 நாள் வேலை கோரி மறியல்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே 100 நாள் வேலை கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே 100 நாள் வேலை கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா. பழூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் 100 நாள் வேலை கடந்த சில ஆண்டுகளாகவே பெயரளவுக்கு மட்டுமே நடப்பதாகவும், எனவே அதிக நாள்கள் பணி வழங்கக் கோரி ஊராட்சித் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலருமான உலகநாதன் தலைமையில், கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் ஆனந்தன், தா. பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.