அரியலூர்

அண்ணா, பெரியாா் பிறந்த நாள் பேச்சுபோட்டி:மாணவா்களுக்கு அழைப்பு

DIN

பேரறிஞா் அண்ணா, தந்தை பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி 15.09.2022 அன்று வியாழக்கிழமையும், தந்தை பெரியாா் நாளையொட்டி 17.09.2022 அன்று சனிக்கிழமையும் அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது.

இப்போட்டியானது மேற்கண்ட தேதிகளில் காலை 10 மணிக்குத் தொடங்கப்படும். மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வா், பள்ளி தலைமை ஆசிரியா் ஆகியோரிடம் அனுமதி பெற்று வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT