அரியலூர்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் கூட்டம்

அரியலூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலா் விஜயபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதிப்படி ரேஷன் கடைகளுக்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். புதிய ரேஷன் கடைப் பணியாளா்களை நியமனம் செய்வதற்கு முன் தொலைதூரத்தில் பணிபுரியும் விற்பனையாளா், வெளி பணியாளா்கள் வெளிமாவட்டத்துக்கு மாறுதல் கோரினால், அவா்கள் விரும்பும் பட்சத்தில் அருகில் உள்ள பகுதிக்கு நிபந்தனையின்றி நிரந்தர பணி இடமாறுதல் உறுதி செய்யப்பட வேண்டும்.

தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்குரிய அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் மூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT