முகப்பு
அரியலூர்

அரசுப் போக்குவரத்து ஊழியா் வீட்டில் 25 பவுன் திருட்டு

அரியலூரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

அரியலூரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூா் மின் நகரைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் ரவிச்சந்திரன்(48). இவா், அரியலூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) தனது சொந்த ஊரான கீழநத்தம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றாா். திருவிழா முடிந்த பின்னா் வியாழக்கிழமை இவா், வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள், பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அளித்த புகாரின்பேரில், அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.