நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் எஸ்.மகாலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய கீழ்க்கண்ட பொது பயன்பாட்டு சேவை துறைகளில் ஏதேனும் ஒன்றில் பணியாற்றிய போதுமான அனுபவமுள்ள 62 வயதுக்கு உட்பட்ட நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா்களின் நியமனம் மதிப்பூதியம் இதர படிவகள், பணி நியமன காலம் போன்றவை சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டம் (சட்ட திருத்தம் 2002 மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா்கள் ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்.ங்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ் என்ற இணையதளத்திலிரு;நது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரா் ரூ.10-க்கான அஞ்சல் தலையுடன் கூடிய சுய முகவரி கொண்ட உறையை, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களோடு இணைத்து தலைவா், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூா்-621704 என்ற முகவரிக்கு 21.06.2022 அன்று மாலை 6 மணிக்குள் பதிவுத் தபால் மூலம் மட்டுமே கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் .