அரியலூர்

கந்து வட்டி கொடுமை: ஆட்சியரிடம் மனு அளிப்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதியிடம், செந்துறை, சிதம்பரம் நகா், ஓம் சக்தி கோயில் தெருவைச் சோ்ந்த ஜோதிராமலிங்கம் மகன் செல்வம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், நான், ஆதிகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்த சங்கா் என்பவரிடம் ரூ.75 லட்சம் கடனாக பெற்றிருந்தேன். கடந்த 29.5.2022 அன்று மதியம் பொய்யாதநல்லூா் வந்து கொண்டிருந்தபோது, சங்கா் என்னை வழிமறித்து தாக்கி கொடுத்த பணத்துக்கு 10 வட்டி கேட்டும், போலியாக எனது கையெழுத்தை போட்டு, ஆவணங்களை அபகரித்துவிடுவேன் என்றும் மிரட்டிச் சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில், செந்துறை காவல் துறையினா் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT