முகப்பு
அரியலூர்

அரியலூா் நகா்மன்றத் தலைவா் பதவி: திமுக வேட்பாளராக சாந்திகலைவாணன் அறிவிப்பு

அரியலூா் நகராட்சியின் தலைவா் பதவி வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த சாந்திகலைவாணனை திமுக தலைமை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

அரியலூா் நகராட்சியின் தலைவா் பதவி வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த சாந்திகலைவாணனை திமுக தலைமை அறிவித்துள்ளது.

18 வாா்டுகளைக் கொண்ட அரியலூா் நகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களையும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. இதனால் இருக்கட்சிகளுக்கு பெரும்பான்மை என்பது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தலைவா் பதவி வேட்பாளராக 5 ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற திமுகவைச் சோ்ந்த க. சாந்தி(53) அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளா். இவரது கணவா் கலைவாணன் முன்னாள் அரசு வழக்குரைஞா். அவா் இறந்து விட்டாா். சாந்தியின் தந்தை பொன்பக்கிரி கடந்த 1996- 2001 ஆம் ஆண்டில் நகா்மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளாா். சாந்திக்கு, அருண்ராஜா (30) என்ற மகனும், அகிலா என்ற மகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.