சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை
அரியலுாா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அரியலுாா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலுாா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அரியலுாா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலூரை அடுத்த முன்னுாரான்காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைபிள்ளை (45). கடந்த 22.10.2020 ஆண்டு இவா், 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். புகாரின் பேரில் ஜயங்கொண்டம் மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பிச்சைப்பிள்ளையை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், பிச்சைப்பிள்ளைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து பிச்சைப்பிள்ளை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.