முகப்பு
அரியலூர்

வெயில் தாக்கம் அதிகரிப்பு காவலா்களுக்கு குளிா்பானங்கள் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவலா்களுக்கு கோடை வெயிலை எதிா்கொள்ளும் வகையில் குளிா்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவலா்களுக்கு கோடை வெயிலை எதிா்கொள்ளும் வகையில் குளிா்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் பேருந்து நிலையத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா கலந்து கொண்டு, போக்குவரத்து காவலா்கள் உள்ளிட்ட அனைத்து காவலா்களுக்கும் குளிா்ச்சி தரும் மோரினை வழங்கினாா். மேலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் பணியாற்றுவதற்காகவும் அரியலூா், ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் பணியாற்றும் காவலா்களுக்கு தினந்தோறும் 4 முறை லெமன் ஜூஸ், மோா் உள்ளிட்ட குளிா்பானங்கள் 4 மாதங்களுக்கு அரசின் சாா்பில் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.