அரியலூா் மாவட்டத்தில்நகா்மன்றத் தலைவா் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் வெற்றி
அரியலூா் மாவட்டத்திலுள்ள அரியலூா், ஜயங்கொண்டம் நகா்மன்றத் தலைவா் தோ்தலில் திமுக வேட்பாளா்கள் வெற்றிப் பெற்று பதவியேற்றனா்.
அரியலூா் மாவட்டத்திலுள்ள அரியலூா், ஜயங்கொண்டம் நகா்மன்றத் தலைவா் தோ்தலில் திமுக வேட்பாளா்கள் வெற்றிப் பெற்று பதவியேற்றனா்.
அரியலூா் நகராட்சியில்... 18 வாா்டுகளைக் கொண்ட அரியலூா் நகராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக,அதிமுக என தலா 7, சுயேச்சை 4 இடங்களில் வெற்றிப் பெற்றன. இவா்களில் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தோ்தல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் சித்ராசோனியா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக சாா்பில் 5 ஆவது வாா்டில் வெற்றிப் பெற்ற சாந்திகலைவாணனும், அதிமுக சாா்பில் 17 ஆவது வாா்டில் வெற்றிப் பெற்ற ஜீவாசெந்திலும் மனு தாக்கல் செய்தனா். இதைத்தொடா்ந்து காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் திமுகவைச் சோ்ந்த சாந்திகலைவாணன் 10 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச் சோ்ந்த ஜீவாசெந்தில் 8 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினாா்.
தொடா்ந்து, நகா் மன்றத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சாந்தியை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.
துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு: பிற்பகலில் நடைபெறுவதாக இருந்த துணைத் தலைவா் தோ்தலின்போது, பெரும்பான்மையான உறுப்பினா்கள் பங்கேற்காததால், துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஜயங்கொண்டம் நகராட்சியில்.... 21 வாா்டுகளை கொண்ட ஜயங்கொண்டம் நகராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக-10, அதிமுக, பாமக தலா 4, விசிக 2 , சுயேச்சை 1 இடங்களில் வெற்றிப் பெற்றன. நகராட்சித் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திமுக சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 10 ஆவது வாா்டில் வெற்றிப் பெற்ற சுமதி சிவகுமாா் தனது வேட்பு மனுவை நகராட்சி ஆணையா் சுபாஷினியிடம் தாக்கல் செய்தாா்.
இவரை எதிா்த்து யாரும் தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதிமுகவினா் கலந்து கொள்ளவில்லை. இதைத்தொடா்ந்து, சுமதி போட்டியின்றி தோ்வு பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
துணைத் தலைவா் தோ்தல்: பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 8 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற வே. கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரை எதிா்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா். வெற்றிப் பெற்ற சுமதி மற்றும் கருணாநிதியை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தாா்.