முகப்பு
அரியலூர்

சிறுவளூா் அரசுப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம்

அரியலூா் அருகேயுள்ள சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

அரியலூா் அருகேயுள்ள சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். கருப்பூா் பொய்யூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் கிரேஸி, தமிழ்ச்செல்வி, நாகம்மையாா், சுகாதார ஆய்வாளா்கள் அருண் குமாா், ராஜேந்திரன் கலந்து கொண்டு, அப்பள்ளியில் பயிலும் 12 முதல் 14 வரையுள்ள 75 மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்தினா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.