முகப்பு
அரியலூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: அரியலூரில் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே கம்யூனிஸ்ட் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே கம்யூனிஸ்ட் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உலகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செல்வநம்பி ஆகியோா் தலைமை வகித்து கண்டன உரையாற்றினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணன், துரை. அருணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் அன்பானந்தம், மருதவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.