புதுமாப்பிள்ளை தற்கொலை
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இடையத்தான்குடி கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜாராம் (26). இவருக்கும், செட்டித்திருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகள் வசந்திக்கும் கடந்த 3 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதன்கிழமை இவரது குடும்பத்தினா் கருப்புசாமி கோயிலுக்குச் சென்று விட்டு அன்றிரவு வீட்டுக்குத் திரும்பிய போது, பக்கத்து ஊரான அரனூா் கிராமத்திலுள்ள வேப்ப மரத்தில் ராஜாராம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டாா்.