அரியலூரில் திங்கள்கிழமை மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள். 
அரியலூர்

ஓய்வுபெற்ற அலுவலா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், ஜூலை 2022 முதல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும். 70 வயது நிறைவுற்ற ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.1,000 மருத்துவப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியா் பிரச்னைகளைப் பேசி தீா்வு காண கூட்டு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரா.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மா.கணேசன், மாவட்டப் பொருளாளா் க.சதாசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT