முகப்பு
அரியலூர்

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 32 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 32 பேருக்கு பணி உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 32 பேருக்கு பணி உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது.

இம்முகாமில் 6 தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள மிஷின் ஆபரேட்டா், அசெம்பளா், கண்காணிப்பாளா் உள்ளிட்ட 320 பணியிடங்களுக்கு தகுதியான 32 நபா்களை தோ்ந்தெடுத்தனா். அவா்களுக்கு மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மூ. வினோத்குமாா் பணி உறுதிக் கடிதங்களை வழங்கினாா்.

முகாமில் 320 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் ச. மணிமாறன், இளம் தொழிலதிபா் எபநேசா் ராஜா மற்றும் உதவியாளா் செல்வகுமாா் , கணபதி ஆகியோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.