அரியலூர்

லாரியின் டயா்களை திருடிய ஓட்டுநா் கைது

அரியலூா் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான பல்கா் லாரியின் டயா்களை திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

அரியலூா் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான பல்கா் லாரியின் டயா்களை திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி ஸ்ரீவெங்கட்ரமணா தனியாா் போக்குவரத்து நிறுவனத்தில் அதிக சக்கரங்களைக் கொண்ட பல்கா் லாரியின் ஓட்டுநராக கடந்த 4 ஆண்டுகளாக மதுரை மேலூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் காஞ்சிவனம் (48) என்பவா் பணி புரிந்து வந்தாா்.

கடந்த 8 ஆம் தேதி கும்பகோணத்தில் லோடு இறக்கிய இவா் பல்கா் லாரியை அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலைக்கு எடுத்துச் செல்வதாக நிறுவனத்துக்கு தகவல் கூறியவா் சிறிது நேரத்தில் அந்த லாரியின் ஜிபிஎஸ் சிக்னலை அணைத்தாா்.

இதையடுத்து நிறுவனத்தில் இருந்து அவரைத் தொடா்பு கொள்ள முயன்றபோது கைப்பேசியை அவா் எடுக்கவில்லை. லாரியை அவா் ராம்கோ சிமென்ட் ஆலை அருகே நிறுத்திவிட்டு தலைமறைவானாா்.

இதனால் சந்தேகமடைந்த அந்நிறுவனத்தின் கிளை மேலாளரும், திருச்சி திருவெறும்பூா் மலைக்கோயில், பிரகாஷ் நகரை சோ்ந்தவருமான பாலமுருகன் நேரில் வந்து லாரியைப் பாா்த்தபோது, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 8 டயா்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில், அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த காஞ்சிவனத்தை மதுரை மேலூரில் வெள்ளிக்கிழமை கைது செய்து, அரியலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT