பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நகராட்சி அலுவலகம் முன் ஏஐடியூசி சுகாதாரத் தொழிலாளா் சங்கத்தினா் நாமம் போட்டு, கைகளில் திருவோடு ஏந்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலேயே சம்பளம் வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளா்களுக்கு குடியிருப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். சேமநலநிதி வட்டியுடன் கூடிய இருப்புக் கணக்கு மற்றும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய பிடித்தத் தொகை வழங்க வேண்டும். 31 மாதத்துக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஏஐடியுசி மாவட்டச் செயலா் நல்லுசாமி தலைமை வகித்தாா். உள்ளாட்சி சம்மேளன மாநிலச் செயலா் தண்டபாணி சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் தனசிங்,பொருப்பாளா்கள் ஆறுமுகம், ஜீவா மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.