அரியலூர்

கலை விருதுகள் பெற அரியலூா் கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் அரியலூரைச் சோ்ந்த கலைஞா்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

DIN

முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் அரியலூரைச் சோ்ந்த கலைஞா்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசை கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களிடம் இருந்து விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேசிய, மாநில மற்றும் கலைமன்ற விருதுகள் பெற்றவா்கள் விண்ணப்பிக்க இயலாது.

தகுதிவாய்ந்த கலைஞா்கள் வரும் 29 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநா், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-06 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT