அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக திருக்கு கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய மாநில துணைப் பொதுச் செயலா் பெ.சௌந்தரராஜன். 
அரியலூர்

அரியலூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் திருவள்ளூவா் சிலை அமைக்க வலியுறுத்தல்

அரியலூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என்று உலக திருக்கு கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

DIN

அரியலூா்: அரியலூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என்று உலக திருக்கு கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக திருக்கு கூட்டமைப்பு பெரம்பலூா் மாவட்ட மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில், அரியலூா் மாவட்டத்தில் புதிய சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மண்டலத் தலைவா் க. சின்னதுரை தலைமை வகித்தாா். தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ஞானமூா்த்தி, திருக்குறளை பின்பற்றி ஒவ்வொரு மனிதரும் வாழ வேண்டும் என்றாா்.

மாநில துணைப் பொதுச் செயலா் பெ. சௌந்தரராஜன் பேசுகையில், திருக்குறளின் வாழ்வியல் நெறி முறைகளை கிராமங்கள் தோறும் பரப்ப வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், நிா்வாகிகள் சி. இளங்கோவன், சமூக ஆா்வலா் நல்லப்பன், புலவா்கள் அரங்கநாடன், குப்புசாமி, கயா்லாபாத் முன்னாள் ஊராட்சித் தலைவா் அ. ரவி, தமிழ்களம் இளவரசன், மகளிா் அணி மங்கையா்கரசி, நிா்வாகிகள் அண்ணாமலை, பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முடிவில் துணைச் செயலா் செவ்வேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT